மூதூர் சம்பூர் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 17, 2013

மூதூர் சம்பூர் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம்திருகோணமலை மாவட்டம் மூதூா் கிழக்கு சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பல காலமாக கிளிவெட்டியில் உள்ள இடம்பெயர் முகாம்களில் வசித்து வருகின்றனர்.

தமது சொந்த இடங்களில் தம்மை மீளக் குடியேற்றுமாறு இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனினும் இதற்கு செவிசாய்க்காத அரசாங்கம், அந்த மக்கள் வாழ்ந்த அவர்களின் பாரம்பரிய வாழ்விட நிலங்களை இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு தாரைவார்த்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிளிவெட்டியில் வசித்து வருகின்றன.
போர் முடிவடைந்த நான்கு வருடங்கள் கடந்த பின்னரும் இதுவரை அவர்கள் மீள்குடியேற்றப்படவில்லை
இந்தநிலையில் இடம்பெயர்ந்து மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியேற வழியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வேண்டி இன்று வழிபாட்டு ரீதியான அமைதியான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், பொன். யோகராசா உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:

Post Top Ad