பிக்குகள் சமீபத்திய சமூகம் குறித்து தெளிவை பெற வேண்டும் ; ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 30, 2013

பிக்குகள் சமீபத்திய சமூகம் குறித்து தெளிவை பெற வேண்டும் ; ஜனாதிபதி

(ad)

திறமையற்றவர்களை திறமையானவர்களாக மாற்றுவது கல்வியின் பொறுப்பாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


திறமையான பிள்ளைகளை மட்டும் தேர்ந்தெடுத்து உள்வாங்கிக் கொள்வது சில பாடசாலைகளின் வழக்கமான செயலாகிவிட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

பிள்ளைகளின் நலிந்த நிலையை நீக்கி அவர்களுக்குள் திறமையை ஊட்டி நல்ல பிரஜைகளாக அவர்களை மாற்ற வேண்டியது கல்வியின் ஊடாக இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

ஹொரண பகுதியில் இடம்பெற்ற பாடசாலை கட்ட திறப்பு விழா நிகழ்வில் இன்று (30) கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 

பிரிவெனா கல்வி இந்நாட்டுக்கு முக்கியமானதென ஜனாதிபதி கூறியுள்ளார். 

பிக்குகள் சமீபத்திய சமூகம் குறித்து தெளிவை பெற வேண்டியதோடு பாலி, கலாசாரத்துடன் ஆங்கில மொழியையும் கற்க வேண்டியது முக்கியம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளா

No comments:

Post Top Ad