க.பொ.த சா/த பரீட்சை வினாத்தாளில் சிக்கல் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, November 11, 2013

க.பொ.த சா/த பரீட்சை வினாத்தாளில் சிக்கல் (படங்கள் இணைப்பு)
(ad)

மத்திய மாகாணத்தில் இம்முறை க.பொ.த சா/த பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தவணை பரீட்சை தற்சமயம் நடைபெற்று வருகிறது. 

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. 


இந்நிலையில் இன்று (11) வழங்கப்பட்ட தமிழ் மொழியும் இலக்கியமும் என்ற வினாத்தாளில் சிக்கல்கள் காணப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக தமிழ் மொழியும் இலக்கியமும் பகுதி 2ல் பகுதி மூன்றுக்குரிய வினாவும் பகுதி மூன்றில் பகுதி இரண்டுக்குரிய வினாவும் அச்சிடப்பட்டுள்ளதால் வினாத்தாளுக்கு விடை அளிப்பதில் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். 

பொதுவாக பகுதி இரண்டு பரீட்சை முடிந்ததும் 15 நிமிட இடைவேளை விடப்பட்டு பின்னர் பகுதி மூன்று பரீட்சை நடத்தகப்படும் என்ற போதிலும் வினாக்களில் அச்சு மாற்றம் காணப்படுவதால் மாணவர்களுக்கு இடைவேளை வழங்கப்படாது நான்கு மணித்தியாலம் தொடர்ந்து பரீட்சை எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்த வினாத்தாள் சிக்கல் குறித்து மத்திய மாகாண பரீட்சை திணைக்களத்துடன் தொடர்பினை ஏற்படுத்திய போதும் உடன் பதில் எதுவும் கிடைக்கவில்லை. 

அடுத்த மாதம் தமது இறுதிப் பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள சா/த மாணவர்களுக்கு தவணைப் பரீட்சையில் இவ்வாறு சிக்கல் உண்டாக்கியுள்ளமை அவர்களின் மன தைரியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post Top Ad