போலி நாணயத்தாள்கள் அச்சிட்டவர் இவர்தான் தகவல் தெரிந்தால் அறிவிக்கவும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

போலி நாணயத்தாள்கள் அச்சிட்டவர் இவர்தான் தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்


பெருமளவில் போலி நாணயத் தாள்களை அச்சிட்டு நாடு முழுவதும் விநியோகித்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் போலி நாணயங்கள் தொடர்பான விசாரணை பிரிவினரால் கொழும்பு மாலபே பிரதேசத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான 2000 ரூபா போலி நாணயத் தாள்கள் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான திமுத்து நுவான் குமார என்பவர் தங்கியிருந்த இலக்கம் 973 கீழ் 16 , பொதுத்துஹார வீதி மாலபே என்ற வீட்டின் உரிமையாளரான கம்மல்கொட லியனகே பந்துல குமார ( அடையாள அட் இல:700342115V)  என்பவரும் இந்த போலி நாணயத் தாள் அச்சிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் அந்த சந்தேக நபரை கைது செய்ய பொலிஸ் திணைக்களம் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.
சந்தேக நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர் பற்றிய தகவல் அறிந்தால் 011 2422176, 011 2326670, 011 2320141-5 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது 011 2380380 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு தகவல் தருமாறு கோரப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad