ஈரான் மீது போர் தொடுக்க ஈராக்கை தூண்டியது யார்? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

ஈரான் மீது போர் தொடுக்க ஈராக்கை தூண்டியது யார்?


(முபாறக் அப்துல் மஜீத் முகப்புத்தகத்திலிருந்து)

ஈரான் மீது போர் தொடுக்க ஈராக்கை தூண்டியது யார்? போன்ற கேள்விகளுக்கு யாரும் தூண்டவில்லை என்பதுதான் சரியான பதில். ஏற்கனவே நீறு பூத்திருந்த விடயங்கள்தான் காலாகாலமாக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. நபியவர்களின் மரணத்தின் பின் இந்த முஸ்லிம் சமூகம் இரண்டாக பிளவு பட்டது ஷீயாக்கள் என்ற துரோகிகளினால்தான். அதன் பின்னர்தான் முஸ்லிம்கள் என அழைக்கப்பட்டு வந்த சமூகம் சுன்னி என்றும் ஷீயா என்று இரண்டாகியது. அது முதல் சுன்னிகள் என்றால் ஷீயாவுக்கு பயம். ஷீயா என்றால் சுன்னிக்கு பயம்.


இந்த அச்சம் காரணமாக ஒருவரை யொருவர் இன்றுவரை சந்தேக கண்கொண்டு பார்க்கிறார்கள். குமைனியன் ஈரானிய புரட்சி மூலம் இப்பிரிவுகள் நீக்கப்பட்டு முஸ்லிம்கள் என்று அனைவரும் அறியப்படுவர் என எதிர் பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை. இப்போது இலங்கையிலும் ஈரானியர் இஸ்லாம் என்ற கொள்கையை புகுத்துவதை விட ஷீயா கொள்கையை பரப்புவதால்தான் மற்றவர்கள் ஈரான் பற்றி அச்சம் கொள்கிறார்கள். இதுவரை ஈரான் இலங்கையில் மாற்று மதத்தவரிடம் இஸ்லாத்தை எத்தி வைக்க முனையவில்லை.

சில முஸ்லிம்களை பணம் கொடுத்து வாங்கி முஸ்லிம்கள் மத்தியில்தான் மூளைச்சலவை செய்கிறது. இதனால்தான் நானும் ஈரான் விடயத்தில் ஆத்திரமாக இருக்கிறேன். எதிரியை விட நண்பன் போன்றிருக்கும் எதிரி ஆபத்தமானவன் என்பதால் தான் ஷீயா விடயத்தில் சஊதி கவனமாக இருக்கிறது. அமெரிக்கனால் சஊதியின் பணத்தைத்தான் கொள்ளையடிக்க முடியும். ஆனால் ஈரான் சஊதி மக்களின் அத்மீகத்தை கொள்ளையடித்து விடுவார்கள் என்ற அச்சம் அங்குள்ள உலமாக்களுக்கு உள்ளது. அது நியாயம்தான்.

சஊதி சரியா பிழையா என்பது நமது வாதமல்ல. மாறாக சஊதி பிழை என சொல்பவர்கள் முதலில் எடுத்துக்காட்டாக தாம் இருக்க வேண்டும். அமெரிக்காவோ ரஷ்யாவோ தேவையில்லைஇ ஸீயா சுன்னா மோதல் தேவையில்லை என கூறுபவர்கள் முதலில் சுன்னிகளை பற்றி மோசமாக எழுதி வைத்திருக்கும் தமது இமாம்களின் கிதாபுகளை பகிரங்கமாக தீயிலிட வேண்டும். அதுவரை இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினம்.

No comments:

Post Top Ad