வறுமையின் வாட்டத்தில் மியன்மார் இளவரசி (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

வறுமையின் வாட்டத்தில் மியன்மார் இளவரசி (படங்கள் இணைப்பு)


மியான்மரை ஆட்சி செய்து வந்த இளவரசி தற்போது வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்.
மியான்மரில் மன்னர் ஆட்சி இருந்த காலகட்டத்தில், திபா என்பவர் கடைசி மன்னராக இருந்தார்.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது கடந்த 1885ம் ஆண்டில் இவரது அதிகாரம் பறிக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்டது.
அதையடுத்து மன்னர் பரம்பரை ஒழிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினர் சாதாரண குடி மகன்களாக்கப்பட்டனர்.
அந்த வழியில் வந்த கடைசி இளவரசி ஆக ஹிடெக் சு பாயா ஜி என்பவர் இன்னும் உயிர் வாழ்கிறார், அவருக்கு 90 வயது ஆகிறது.
தற்போது யங்கூன் நகரில் ஒரு குடிசை வீட்டில் வறுமையில் வாழ்கிறார். 60 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசியாக வலம் வந்த இவர் தற்போது அண்டை வீட்டாருக்கு கூட யார் என்று தெரியவில்லை.
ஓரளவு வசதியாக வாழ்ந்த தான் குடும்ப சண்டை காரணமாக பரம்பரை வீட்டை இழந்து தற்போது குடிசையில் வாழ்வதாகவும், இளவரசியாக வசதியுடன் வாழ்ந்ததை நினைத்து பொழுதை கழிப்பதாகவும் தெரிவித்துள்ளார்

No comments:

Post Top Ad