உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புனர்வு ஊர்வலம்-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, November 13, 2013

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புனர்வு ஊர்வலம்-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு (எம்.எஸ்.டப்ளியூ) சமூக நலனுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் அமானா தகாபுல் நிறுவனத்தின் அனுசரனையுடன்; நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புனர்வு ஊர்வலம் இன்று 13-11-2013 புதன்கிழமை மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் சமூக நலனுக்கான அமைப்பின் தலைவர் எம்.ஏ.இம்தியாஸ் தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் “நீரிழிவு நோய் ஒரு அமைதியான கொலையாளி”ää “நீரிழிவு அற்ற ஆரோக்கியமான வாழ்வை அனுபவிப்போம்”ää”என்னால் முடியம் நீரிழிவை கட்டுப்படுத்த”ää”சுகாதாரமான வாழ்வுக்கு நடைப்பயிற்சி அவசியம் இன்றிலிருந்து ஆரம்பிப்போம்” எழுதப்பட்ட் பல்வேறு பதாதைகளை ஏந்தி வீதியில்  நடைபாதையாக சென்றனர்.

“நீரிழிவு நோயை எம்மாலும் கட்டுப்படுத்த முடியும்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ் சமூக விழிப்புனர்வு ஊர்வலத்தில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்ääகிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் சிப்லி பாரூக்ääகாத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன்ääஉற்பத்தி திறன் திறன அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.எம்.மூபீன்ääமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எல்.ஏ.ஷியாம்ääகாத்தான்குடி தள வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஜாபிர்ääகாத்தான்குடி பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரீசோதகர் றபீக் ää சுகாதாரப் பரீசோதகர் றஹ்மதுல்லாஹ் மற்றும் காத்தான்குடி வைத்தியசாலை ஊழியர்கள்ää சமூக நலனுக்கான அமைப்பின் உறுப்பினர்கள்ääபாடசாலை மாணவர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதி இரும்பு தைக்கா பள்ளிவாயல் முன்பாக ஆரம்பமான இவ் விழிப்புனர்வு ஊர்வலம் காத்தான்குடி பிரதான வீதி வழியாக காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயம் வரை சென்றதுடன் நீரிழிவு நோய் தொடர்பான துண்டுப்பிரசுரமொன்றும் விநியோகிக்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஏ.எல்.ஏ.ஷியாம் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 288மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad