கசினோவுக்கு எதிராக பெண்களிடம் கையெழுத்து பெற ஹெல உறுமய மகளிர் அமைப்பு தீர்மானம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, November 11, 2013

கசினோவுக்கு எதிராக பெண்களிடம் கையெழுத்து பெற ஹெல உறுமய மகளிர் அமைப்பு தீர்மானம்


கசினோ உட்பட சமூக சீர்கேடு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு அபிமானி மகளிர் அபிவிருத்தி மன்றம் 10 லட்சம் பெண்களிடம் கையெழுத்துக்களை பெற்று பாரிய மகஜர் ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்க தீர்மானித்துள்ளது. 
கசினோ சூதாட்ட நிலையங்கள் ஆரம்பிக்கப்படுவது உட்பட சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து ஆயிரக்கணக்கான பெண்களின் பங்களிப்போடு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என அந்த அமைப்பின் தலைவியும், ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற்குழு உறுப்பினருமான நிரோஷா அத்துகோரள தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும். அன்றைய தினமே பெண்களிடம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.
முதலில் கொழும்பில் பெண்களிடம் கையெழுத்துக்களை பெற்ற பின்னர் ஏனைய நகரங்களிலும் பெற்று மகஜரை தயாரித்து பேரணியாக சென்று அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க எண்ணியுள்ளோம்.
நாட்டை அபிவிருத்தி செய்யக் கூடிய எத்தனையோ வளங்கள் நாட்டில் இருக்கும் பொழுது, சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய நினைப்பது பௌத்த விழுமியங்களுடன் கூடிய நாட்டுக்கு பொருத்தமற்றது.
விவசாயம் உள்ளிட்ட தேசிய தொழிற்துறைகள் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.
அபிவிருத்திக்காக சமூகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்ததால் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தமான தலையெழுத்து கண்களுக்கு எதிரில் உலகில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post Top Ad