பொதுபல சேனாவை தாக்கியமைக்காக ரணில் மன்னிப்புக் கேட்க வேண்டும் ; ஹெல உறுமய - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 16, 2013

பொதுபல சேனாவை தாக்கியமைக்காக ரணில் மன்னிப்புக் கேட்க வேண்டும் ; ஹெல உறுமய

பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்குகளை கூடாத வார்த்தைகளால் பேசி அவர்களை அவமதித்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க - கரு ஆகியோரின் தலைமைத்துவம் மன்னிப்புக் கோர வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
பௌத்த பிக்குகளிடம் மட்டுமல்லாது அவர்கள் முழு பெளத்த மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பெளத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை ஜாதிக ஹெல உறுமய வன்மையாக கண்டிக்கின்றது.
அதேபோல் நாட்டுக்கு எதிராக புலிகளுக்கு ஆதரவான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தை பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் கட்சியின் புதிய தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மனித உரிமை நிகழ்வுகளை அரசாங்கத்தின் பௌத்த கூலிப் படையினரான பொதுபல சேனா அமைப்பு குழப்பும் முயற்சியில் ஈடுபட்டதாக அரசசார்பற்ற சிங்கள இணையத்தளங்கள் குறிப்பிட்டுள்ளன.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான வன்முறை குழுவில் ஆளும் கட்சியின் உறுப்பினர்களும் இருந்ததாகவும் இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தியதுடன் உள்ளே புகுந்து அங்கிருந்தவர்கள் விபச்சாரிகள், துரோகிகள் என்று கூறி கெட்டவார்த்தைகளால் பேசியதால் அங்கு இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும் அந்த இணையத்தளங்கள் கூறியுள்ளன.
மோதலில் சிக்கிய ஞானசார தேரர் அங்கிருந்து தப்பித்து ஓடியதாகவும் லங்கா ஈ நியூஸ் என்ற அரசசார்பற்ற சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.

No comments:

Post Top Ad