காத்தான்குடி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 10, 2013

காத்தான்குடி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)

நீதி அமைச்சின் கீழ் இயங்கும் காத்தான்குடி மத்தியஸ்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 40 உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 08-11-2013  வெள்ளிக்கிழமை காத்தான்குடி பள்ளிவால்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மர்ஹ_ம் அஷ்ஷஹீட் அஹமட் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் காத்தான்குடி மத்தியஸ்த சபை தவிசாளர் எம்.ஐ.எம்.முஹமட் உசனார் தலைமையில் இடம்பெற்றது.


இதன் போது நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ்-என்.எம்.அப்துல்லாஹ்வினால் காத்தான்குடி மத்தியஸ்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட  27 ஆண்ää13 பெண் உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இங்கு பிரதம அதிதி உரையை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ்-என்.எம்.அப்துல்லாஹ் நிகழ்தினார்.

இந் நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக  உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர்ää காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ரணசிங்க ää காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரி.ஹாலித்ää அதன் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத்ääகாத்தான்குடி காதி நீதிபதியும் மட்டக்களப்புääகாத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவருமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) உட்பட சட்டத்தரணிகள்ää ஊர்பிரமுகர்கள்ää உலமாக்கள்ää சம்மேளன பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இவ் மத்தியஸ்த சபையின் தவிசாளராக எம்.ஐ.எம். முஹமட் உசனாரும் பிரதித் தவிசாளராக மௌலவி எஸ்.எச்.முஹமட் றமீஸ் ஜமாலியும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad