நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசம்பர் 6 திகதி மூடப்படுகிறது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசம்பர் 6 திகதி மூடப்படுகிறது


நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படவிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

பாடசாலைகள் அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி மீண்டும் முதலாம் தவணைக்காகத் திறக்கப்படவுள்ளன. ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஏப்ரல் 8 ஆம் திகதி வரை முதலாம் தவணைக்காக பாடசாலைகள் இயங்கவுள்ளதுடன்இ ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டாம் தவணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.


ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை இரண்டாம் தவணைக்கான பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும்இ செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகள் இடம்பெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளில் 2014 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதிவரை முதலாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளும்இ ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் ஜூன் 27 ஆம் திகதி வரை இரண்டாம் தவணையும்இ ஆகஸ்ட் 4 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை மூன்றாம் தவணைக் கல்வி செயற்பாடுகளும் இடம்பெறவுள்ளன.

No comments:

Post Top Ad