ஈரான் விவகாரம் ; 6 நாடுகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இஸ்ரேல் எதிர்ப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

ஈரான் விவகாரம் ; 6 நாடுகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இஸ்ரேல் எதிர்ப்பு


அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா உள்பட 6 நாடுகள் இடையே சமீபத்தில் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதை இஸ்ரேல் பிரதமரும், அமெரிக்காவில் உள்ள எம்.பி.க்களில் சிலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.


அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா இதற்கு ஒப்புதல் கொடுத்தது. இருப்பினும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஈரான் விவகாரம் தொடர்பாக சவுதி அரேபிய மன்னர் அப்துல்லாவுடன் தொலைபேசியில் பேசினார்.

இந்த தகவலை வெளியிட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகள், ’இரு தலைவர்களும் பேசுவது வழக்கமான ஒன்று. இருப்பினும் ஈரான் அணுசக்தி திட்ட உடன்பாடு பற்றியும் இப்போது பேசி விவாதித்தார்கள்’ என்றார்.

இதற்கிடையில் ஐக்கிய அரபு குடியரசு மந்திரி சேக் அப்துல்லா பின் சயீத் நாளை திடீர் பயணமாக ஈரான் செல்கிறார். அங்கு அவர் ஈரான் வெளியுறவு மந்திரி முகமது ஜாவீத் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.

No comments:

Post Top Ad