தாக்கப்பட்ட 6 தேரர்களும் களுபோவில வைத்தியசாலையில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 15, 2013

தாக்கப்பட்ட 6 தேரர்களும் களுபோவில வைத்தியசாலையில்


ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்த தலைமையகத்திற்குள் சென்ற பொதுபல சேனா அமைப்பை சேர்ந்த பிக்குகள் மீது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் 6 பிக்குமார் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் எந்த பிக்குமாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறு காயங்கள் ஏற்பட்டதால் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பொதுபல சேனா அமைப்பு பௌத்த அடிப்படைவாதத்தை பரப்பி வருவதாக வெளிகாட்டும் புகைப்படங்கள் சிறிகொத்தவில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தாகவும் அதற்கு எதிராகவே தாம் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் கட்சியின் தலைமையகத்திற்குள் பலவந்தமாக சென்றதால் அங்கு இரண்டு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
எனினும் அமைதியான நடைபெற்ற நிகழ்வொன்றை குழப்ப அரசாங்கமே இந்த பௌத்த அடிப்படைவாத குழுவை ஏவிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களும் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொதுபல சேனா அமைப்புடன் இணைந்து தாக்குதல் நடத்தியவர்களில் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினரான மகிந்த கஹந்தகமவும் இருந்துள்ளார்.

No comments:

Post Top Ad