ஜனாதிபதியின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு மரநடுகை விழா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 15, 2013

ஜனாதிபதியின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு மரநடுகை விழா

(vi)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று   “தயட்ட செவண” தேசிய மரநடுகை விழா காலை 10.03மணிக்கு புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்றது.
 
காத்தான்குடி பிரதேச செயலக மட்டத்திலான இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலய அதிபர் தாஸிம், காத்தான்குடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கருணாகரம், பிரதேச செயலக விவசாய போதனாசிரியர்  ரவிசங்கர், பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோகத்தர்  பரமேஸ்வரன், 167பி சமுர்த்தி உத்தியோகத்தர் மர்சூகா றபீக், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், முகாமையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
இதேவேளை “தயட்ட செவண” தேசிய மரநடுகை விழா காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்திலும் நடைபெற்றது.
 
காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரணசிங்க உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் போக்குவரத்து உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
 
இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்விழா நடைபெற்றது.
மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு பாலமீன்மடு கிராமத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad