வங்கதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் 5 பேர் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

வங்கதேசத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் 5 பேர் கைது


வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் ஹசினா பிரதமராக இருந்து வருகிறார். எதிர்கட்சித் தலைவரான வங்கதேச தேசியவாத கட்சித்தலைவர் கலிதா ஜியா, பிரதமருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இவர், வரும் தேர்தலை நேர்மையாக நடத்த பிரதமர் பதவி விலகவேண்டும். ஒரு பொதுவான காபந்து அரசு அமையவேண்டும் என்று போராட்டம் நடத்திவருகின்றார். 


கலிதா ஜியா தலைமையில், 21 எதிர்க்கட்சிகள் நடத்திவரும் தொடர் போராட்டத்தால் அந்நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் நாளை முதல் 72 மணி நேர தொடர் போராட்டத்திற்கு கலிதா ஜியா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது ஷேக் ஹசினா அரசுக்கு மேலும் நெருக்கடியை கொண்டு வந்துள்ளது. 

இதையடுத்து சாதாரண உடையில் சென்ற போலீசார், நேற்றிரவு கலிதா ஜியா கட்சியின் நிலைக்குழு தலைவர்களான மவுதுத் அகமது, எம்.கே. அன்வர், ரபிகுல் இஸ்லாம் மியா ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் ஒரு பத்திரிகை ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கைது செய்யப்பட்டனர். 

பின்னர் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு, கலிதா ஜியாவின் அறிவுரையாளரும், தொழிலதிபருமான அப்துல் அவால் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் கலிதா ஜியாவின் வீட்டிலிருந்து நழுவி சென்றபோது கைதுசெய்யப்பட்டனர். 

மேலும், கலிதா ஜியாவின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற எதிர் கட்சித்தலைவர்களும் தலைமறைவாகியுள்ளனர். இந்த கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் போராட்டத்தை 12 மணி நேரத்திற்கு அதிகரித்து, அதாவது போராட்டத்தை 84 மணி நேரமாக பி.என்.பி. கட்சியினர் அறிவிக்கவுள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், கோபமடைந்த எதிர்க்கட்சியினர் வீதிகளில் சென்ற வாகனத்தை தீயிட்டு கொளுத்தியும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

No comments:

Post Top Ad