சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்காவில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, November 11, 2013

சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்காவில் ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)


சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களான கெலும் மக்ரே, ஜொனத்தன் மில்லர் உட்பட அந்த நிறுவனத்தின் மூன்று ஊடகவியலாளர்களுக்கு எதிராக கட்டுநாயக்கவில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கெலும் மக்ரே உட்பட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகக் குழு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பொழுது விமான நிலையத்திற்கு வெளியில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பும் ஒன்றியம் என்ற அமைப்பு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கைக்கு எதிராக செயற்பட்ட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களான ஜொனத்தன் மில்லர், கெலும் மெக்ரே ஆகியோருக்கு இலங்கையில் கால் வைக்க வீசா அனுமதியை வழங்கிய அரசுக்கும், அரச அதிகாரிகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக ஒன்றியத்தின் உறுப்பினரான எச்.கே.டி. சந்திரசோம தெரிவித்தார்.
சனல் 4 தொலை்ககாட்சியின் இந்த ஊடகவியலாளர்கள் இலங்கையின் செல்வாக்கை இழக்க செய்துள்ளதுடன் விடுதலைப்புலிகள் செய்த அட்டூழியங்களை சுட்டிக்காட்ட தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்
அதேவேளை சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளரும் சர்ச்சைக்குரிய போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனருமான கெலும் மக்ரேவை விமான நிலையத்தில் சூழ்ந்து கொண்ட இலங்கை ஊடகங்கள், அவரது இலங்கைக்கு குற்றம் சுமத்தியதாக ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.No comments:

Post Top Ad