லிபியாவில் ஆயுத கிடங்கு வெடித்து 40 பேர் பலி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

லிபியாவில் ஆயுத கிடங்கு வெடித்து 40 பேர் பலி


லிபியாவில் தெற்கு பகுதியில் உள்ள சாபா நகரம் அருகே பிராக் அல்–சடி பகுதி உள்ளது. அங்கு அரசுக்கு சொந்தமான ஆயுத கிடங்கு உள்ளது. அங்கு லிபியாவை சேர்ந்தவர்களும், ஆப்பிரிக்கர்கள் சிலரும் சேர்ந்து ஆயுதங்களை திருட உள்ளே புகுந்தனர். அப்போது அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஆயுதங்கள் வெடித்து சிதறின.


அதில், 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. எனவே இச்சம்பவத்தில் மேலும் பலர் பலியாக கூடும் என தெரிகிறது.
இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. ஒருவேளை அயுத கொள்ளையர்கள் தீவைத்ததில் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கடாபியின் ஆட்சிக்கு பிறகு ஆயுத கிடங்கு பாதுகாப்பதில் ராணுவம் படாதபாடுபடுகிறது. ஏனெனில் தீவிரவாதிகள் மற்றும் கடத்தல் கும்பல் ஆயுதங்களை கொள்ளையடித்து வருகின்றனர்.

இதுதவிர லிபியாவில் தீவிரவாதிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது. பெங்காசியில் சிறப்பு ராணுவ படைக்கும், அன்சர்– அல்– ஷரியா தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

வெடி பொருட்கள் ஆயுதங்கள் மற்றும் பணத்துடன் வந்த தீவிரவாதிகள் காரை ராணுவ வீரர்கள் மறித்து சோதனையிட்டதால் இந்த மோதல் மூண்டது.

No comments:

Post Top Ad