சைக்கிள்களுக்கு டைனமோ இல்லை ! ஏறாவூரில் 30 சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றினர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, November 12, 2013

சைக்கிள்களுக்கு டைனமோ இல்லை ! ஏறாவூரில் 30 சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றினர்

(nf)
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இரவில் மின்குமிழை ஒளிரச்செய்யாது பயணித்த 30 சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏறாவூர் பொலிஸாரால் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்டுள்ள சைக்கிள்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் விடயங்களை சமர்பிப்பதற்கு முன்னர், சைக்கிள்களுக்கு மின்குமிழ்களை பொருத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரங்களில் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே பிரதேச மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் அதனை மக்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமை காரணமாகவே நேற்றைய தினம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

No comments:

Post Top Ad