காரணமின்றி 2 பலஸ்தீன் இளைஞர்களை படுகொலை செய்த இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

காரணமின்றி 2 பலஸ்தீன் இளைஞர்களை படுகொலை செய்த இஸ்ரேல் பயங்கரவாத இராணுவம்

(tho)

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலத்திற்கு அருகே எல்லை செக்போஸ்டில் இரண்டு ஃபலஸ்தீனியர்களை இஸ்ரேல் இராணுவம் அநியாயமாக சுட்டுக் கொன்றது.
அனஸ் அல் அத்ரஸ் (வயது 23), ஜமால் உதீஹ் (வயது 29) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். 12 மணி நேர இடைவெளியில் இஸ்ரேல் இராணுவம் இருவரையும் சுட்டுக் கொலை செய்துள்ளது.


எவ்விதக் காரணமும் இல்லாமலேயே இஸ்ரேல் இராணுவம் தன் மகனை சுட்டுக் கொலை செய்துள்ளதாக அதரஸின் தந்தை ஃபுவாத் கூறுகிறார்.
இராணுவம் தடுத்து நிறுத்தியதால் செக்போஸ்ட் அருகே இரண்டு மகன்களுடன் அனுமதிக்காக காத்திருந்துள்ளார் ஃபுவாத். அப்போழுது அங்கு காரில் வந்த இஸ்ரேல் இராணுவத்தினர் எவ்விதக் காரணமுமின்றி சுட்டுக் கொலை செய்துள்ளனர். இன்னொரு மகனைக் கைது செய்துள்ளனர்.

No comments:

Post Top Ad