உலக அதிசய பைசா சாய்கோபுரம் 210 கோடி ரூபா செலவில் நிமிர்த்தப்பட்டது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, November 10, 2013

உலக அதிசய பைசா சாய்கோபுரம் 210 கோடி ரூபா செலவில் நிமிர்த்தப்பட்டது


உலக அதிசயங்களுள் ஒன்றான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் 210 கோடி ரூபாய் செலவில் நிமிர்த்தப்பட்டுள்ளது.
இத்தாலியின் பைசா நகரில் உள்ள தேவாலயத்தின் மணிக்கூண்டாகப் பயன்படுத்தவே, 8 மாடிகள் கொண்ட இந்த கோபுரக் கட்டடத்தைக் கட்டத் துவங்கினர்.

கி.பி 1173ம் ஆண்டில் கட்டுமானப்பணி தொடங்கியது.
இதை சாதாரணக் கட்டடம் போல செங்குத்தாகவே கட்டினர். அடித்தளம் சரியாக அமைக்கப்படாததால் கி.பி 1272ம் ஆண்டில், கோபுரம் தென்மேற்கு பக்கமாகக் கொஞ்சம் கொஞ்சமாக சாய ஆரம்பித்தது.
இதன்பின் அடித்தளத்தை சிறிது சரிசெய்து கட்டுமானத்தைத் தொடர்ந்தனர், ஆனாலும் சாய்வு நிற்கவில்லை.
1920ம் ஆண்டில் அடித்தளத்தை நவீன தொழில்நுட்ப முறையில் சரிசெய்தனர்.
இருப்பினும் 1993ம் ஆண்டில் 5.4 செ.மீ.,யும் சாய்ந்தது.
இதனையடுத்து கோபுரத்தை நிமிர்த்தும் பணியில் 11 ஆண்டுகளாக கட்டட வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2001ல் தொடங்கிய இப்பணியில், 14,500 டன் எடையுள்ள கோபுரத்தின் அஸ்திவாரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு ஸ்டீல் கேபிள்கள் அமைக்கப்பட்டன.
இத்திட்டத்திற்கு 210 கோடி ரூபாய் செலவிடப்பட்டது, துவக்கத்தில், 38 செ.மீ., நிமிர்த்த திட்டமிடப்பட்டாலும், இறுதியில், 2.5 செ.மீட்டர் அளவுக்கு நிமிர்த்தப்பட்டது.
இந்நிலையில் 2013ம் ஆண்டு வல்லுனர்கள் அளித்த ஆய்வறிக்கையில் கோபுரம் சாய்வது குறைந்துள்ளது என்றும், மேலும் நேராக்கப்பட்டால் அஸ்திவாரம் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கோபுரத்தைக் காண ஆண்டுதோறும் 60 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இதன் எட்டாவது மாடி வரை செல்வதற்கு, சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஆண்டுக்கு 253 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
தற்போது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளால் இந்தக் கோபுரம் இன்னும் 200 முதல் 300 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இருக்கும் என்று கட்டட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post Top Ad