மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட விபச்சாரிகளுக்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட விபச்சாரிகளுக்கு 20 ஆம் திகதி வரை விளக்கமறியல்


(vi)

மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள விடுதியொன்றில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட விடுதியுரிமையாளர் பெண் உட்பட கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்களையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நேற்று மாலை கல்லடி டச்பார் வீதியில் உள்ள விடுதியொன்றில் விபச்சாரம் நடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற காத்தான்குடி பொலிஸார் மூன்று பெண்களை கைதுசெய்திருந்தனர்.
 
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறை மற்றும் காத்தான்குடி பொலிஸ் புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
 
கைதுசெய்யட்டவர்களில் ஒருவர் வுவுனதீவின் பருத்திச்சேனை பகுதியையும் மற்றையவர் கருவப்பங்கேணி பகுதியையும் சேர்ந்தவர்கள் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைதுசெய்யப்பட்டவர்கள் நேற்று பிற்பகல் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா உத்தரவிட்டார்.
 
அண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ஹோட்டலிலும் விபச்சார சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad