அடுத்த வருடம் நடத்தப்பட உள்ள தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்திற்கு 2035 மில்லியன் ரூபா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, November 29, 2013

அடுத்த வருடம் நடத்தப்பட உள்ள தேர்தல்களுக்காக தேர்தல்கள் திணைக்களத்திற்கு 2035 மில்லியன் ரூபா


அடுத்த வருடம் நடத்தப்பட உள்ள தேர்தல்களுக்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தல்கள் திணைக்களத்திற்கு 2 ஆயிரத்து 35 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் தேர்தல்கள் அடுத்த வருடம் மூன்று கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
அத்துடன் பதவிக்காலம் முடிவடைந்துள்ள சில உள்ளுராட்சி சபைகளின் தேர்தல்களும் அடுத்த வருடம் நடத்தப்பட உள்ளன.
தேசிய ரீதியான தேர்தல் ஒன்றை நடத்த வேண்டுமானால் 230 கோடி ரூபா தேவைப்படும் எனவும், அப்படியான தேர்தல் ஒன்று திடீரென நடத்தப்பட்டால் அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதற்கான நிதியை ஒதுக்கும் எனவும் தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.
அடுத்த ஆண்டு தேர்தல்களுக்காக 2035 கோடி ரூபா ஒதுக்கீடு
அடுத்த ஆண்டு தேர்தல்களுக்காக 2035 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டில் சில தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேல், தென் மற்றும் ஊவா மாகாணசபைத் தேர்தல்களும், சில உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களும் நடத்தப்பட உள்ளன.
தேசிய ரீதியான ஓர் தேர்தலை நடாத்த 230 கோடி ரூபா தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல்களை நடாத்துவதற்காக 2035 கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments:

Post Top Ad