ஏறாவூர் பிரதேச செயலகத்தின் 2013-கலை இலக்கிய விழாவும் இனசமதி சிறப்பு மலர் வெளியீடும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 07, 2013

ஏறாவூர் பிரதேச செயலகத்தின் 2013-கலை இலக்கிய விழாவும் இனசமதி சிறப்பு மலர் வெளியீடும்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஏறாவூர் பிரதேச செயலகத்தின் 2013-கலை இலக்கிய விழாவும் இனசமதி சிறப்பு மலர் வெளியீடும் நாளை வெள்ளிக்கிழமை- சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ.ஹூஸைன் உட்பட 7 ஏழு கலைஞர்கள் கௌரவிப்பு-உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் பிரதம அதிதி

மட்டக்களப்பு –ஏறாவூர் பிரதேச செயலகத்தின் 2013-கலை இலக்கிய விழாவும் இனசமதி சிறப்பு மலர் வெளியீடும்     08-11-2013 நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல்-2.30 மணிக்கு ஏறாவூர் அல்-அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் ஏறாவூர் பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனிபா தலைமையில் நடைபெறவுள்ளதாக ஏறாவூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.சி.எம்.றிஸ்வான் (மதனி) தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சரும்; ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் கலந்து கொள்ளவுள்ளதுடன் கௌரவ அதிதிகளாக கிழக்க மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் பொறியியலாளர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ,ஏறாவூர் நகர சபை தவிசாளர் அலி ஸாஹிர் மௌலானா ,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.அப்துல் மஜீத் உட்பட அரச உயரதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள்,பிரதேச செயலாளர்கள்,ஊர் பிரமுகர்கள் ,நிறுவனங்களின் முக்கியச்தர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


இங்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எச்.ஏ.ஹ_ஸைன் உட்பட 7 ஏழு கலைஞர்கள் ஊடகத்துறை ,ஆக்க இலக்கியம்,தற்காப்புக் கலை, தற்காப்புக் கலை,வரலாறு போன்ற துறைகளுக்காக கௌரவிக்கப்படவுள்ளனர்.

No comments:

Post Top Ad