2000 ரூபா போலி நாணயத்தாள் சூத்திரதாரியை 21ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் படுத்த உத்தரவு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, November 14, 2013

2000 ரூபா போலி நாணயத்தாள் சூத்திரதாரியை 21ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் படுத்த உத்தரவு

(tm)

2000 ரூபா போலி நாணயத் தாள்களை அச்சிட்ட சூத்திரதாரி என கருதப்படும் நுவான் குமார என்பவரை நவம்பர் 21 ஆம் திகதி நீதிமன்றுக்கு கொண்டுவரும்படி கொழும்பு பிரதான நீதவான் இன்று வியாழக்கிழமை சிறைச்சாலை அத்தியட்சருக்கு பணித்தார்.


சந்தேக நபர் ஏற்கனவே விளக்க மறியலில் உள்ளதாகவும்  பிரதான நீதவானுக்கு பதிலாக கடமையாற்றிய மேலதிக நீதவான் சந்தேக நபரை நீதிமன்றில் நேற்று ஆஜர் செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு பணித்திருந்த போதிலும் அவர்கள் சந்தேக நபரை ஆஜர் செய்யவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி தம்மிக சேனாதீர  பிரதான நீதவானுக்கு கூறினார்.

இதைத்தொடர்ந்தே சந்தேக நபரை நவம்பர் 21 வரை விளக்கமறியலில் வைக்கும்படி பணித்த நீதவான் அன்றைய தினம் சந்தேக நபர் நுவான் குமாரவை நீதிமன்றுக்கு கொண்டுவரும்படி சிறைச்சாலை அத்தியட்சகருக்கு பணித்தார்.

No comments:

Post Top Ad