கடந்த 10 மாதங்களில் 1100 பேஸ்புக் முறைப்பாடுகள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, November 09, 2013

கடந்த 10 மாதங்களில் 1100 பேஸ்புக் முறைப்பாடுகள்


பேஸ்புக் சமூக வலைப்பின்னல் குற்றச்சாட்டு குறித்து கடந்த 10 மாதங்களில் 1100 முறைப்பாடுகள் இலங்கை கணினி அவசரக் கண்காணிப்புப் பிரிவுக்குக் கிடைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான்் சந்திரகுப்தா தெரிவித்தார்.

 அண்மைக்காலமாக இணையத்தளங்கள் தொடர்பான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இவ்வருடத்தின் முதல் 10 மாதங்களில் இணையத்தள பாவனையாளரிடம் இருந்து 1100 முறைப்பாடுகள் கணினி அவசர கண்காணிப்புப் பிரிவுக்குக் கிடைத்துள்ளது.
 
குறிப்பாக பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
 
பாவனையாளர்களின் கணக்குகள் அத்து மீறல் ரகசிய குறியீடுகள் மாற்றப்படுதல் போன்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
 
இக்குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் தொடர்புப்பட்டுள்ளவர்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத்தெரிவித்த அவர் இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் உதவியும் பெறப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad