குடும்பத்தாருக்கு அறிவித்த பிறகே மயானம் தோண்டப்பட்டது STF - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, October 03, 2013

குடும்பத்தாருக்கு அறிவித்த பிறகே மயானம் தோண்டப்பட்டது STF


(tw)
ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பின் முன்னாள் அமைச்சர் கே.டப்ளியூ. தேவநாயகத்தின் குடும்ப மயானம் நேற்று படையினரால் தோண்டப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி- பதுளை வீதியிலுள்ள அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.டப்ளியூ. தேவநாயகத்தின் குடும்ப மயானமே இவ்வாறு தோண்டப்பட்டுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள  புலிகளின் உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்தே இந்த மயானம் தோண்டப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
அந்த மயானத்திற்குள் பெருந்தொகையான ஆயுதங்கள் அல்லது பெருந்தொகையில் பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்தே தோண்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடும்ப அங்கத்தவர்களுக்கு அறிவித்துவிட்டதாகவும் அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post Top Ad