“முன்னோக்கிய பாதை” வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு தொண்டர் சேவைகள்- அப்துல்லாஹ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, October 03, 2013

“முன்னோக்கிய பாதை” வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு தொண்டர் சேவைகள்- அப்துல்லாஹ்


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளை மட்டு காத்தான்குடிப் பிரதேசத்தில் பல்வேறு முன்னேற்றகரமான தொண்டர் சேவைகளை வழங்கி வருவதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளைத் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையின் “முன்னோக்கிய பாதை” எனும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் சிறுவனர் தின நிகழ்வுகள்,விழிப்புணர்வு செயலமர்வுகள்,சிரமதானப் பணிகள்,டெங்கு விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் மேலும் பல சேவைகளை மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு காத்தான்குடி கிளை உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad