காத்தான்குடி றிபாஸ் என்பவரின் ஆட்டுப் பண்ணையில் தலையின்றி பிறந்துள்ள அதிசய ஆட்டுக்குட்டி -(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, October 03, 2013

காத்தான்குடி றிபாஸ் என்பவரின் ஆட்டுப் பண்ணையில் தலையின்றி பிறந்துள்ள அதிசய ஆட்டுக்குட்டி -(படங்கள் இணைப்பு)


அல்லாஹ்வின் வல்லமையை புரிந்து கொள்ளுங்கள்!


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஆடு ஒன்று இரண்டு குட்டிகளை ஈன்று அதில் ஒன்று தலையில்லாமல் பிறந்துள்ள அதிசய சம்பவமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி கர்பலா விக்டரி மைதானத்திற்கு முன்பாகவுள்ள டீன் வீதி ஹைறாத் லேனில் அமைந்துள்ள ஏ.எம். றிபாஸ் என்பவரின் ஆட்டுப் பண்ணையில் இன்று வியாழக்கிழமை 03.10.2013 காலை இடம்பெற்றுள்ளது.


இன்று அதில் ஒரு குட்டி குறைகள் ஏதும் இல்லாமலும் மற்றைய குட்டி தலையில்லாமல் உயிருடன் பிறந்து ஐந்து நிமிடங்களில்;  உயிரிழந்துள்ளதாக உரிமையாளர் ஏ.எம். றிபாஸ் தெரிவித்தார்.

இரண்டு ஆட்டுக்குட்டிகளில் ஒன்று இறந்துள்ளதுடன் மற்றது எவ்வித குறைகளுமில்லாமல் நடமாடுகிறது.

ஏ.எம்.றிபாஸ் என்பவர் சுமார் 12ஆண்டுகளாக ஆட்டுப்பண்னை வைத்துள்ளதுடன் ஆடுகள் விற்றல் வாங்கள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad