காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வு-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்;)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.


இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களினால் சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றன.

இதற்கமைவாக  காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு வித்தியாலய அதிபர் ஜனாபா எம்.அப்துல் ஸலாம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி 1ம் குறித்தி மீரா ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் சுபைர் சிசி,காத்தான்குடி ஷூஹதாக்கள் நிறுவனத்தின் செயலாளர் முஹம்மட் றிஸ்வி, காத்தான்குடி ஷூஹதாக்கள் நிறுவனத்தின் உப செயலாளர் நாஸர்,வித்தியாலயங்களின் அதிபர்கள்,ஆசிரிய ஆசிரியைகள்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர்களின் அபிநபயப் பாடல்கள்,பேச்சுக்கள்,பாட்டு,விநோத உடை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறுவர் தின நிகழ்வுகளில் பங்கு பற்றிய சிறார்களுக்கும் ஏற்கனவே சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை ரீதியாக நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர் தின ஊர்வலம் இன்று காலை இ.செ.ச காத்தான்குடிக் காரியாலத்திற்கு முன்பாகவிருந்து  இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிக் கிளைத் தலைவர் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இதில் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள்,சிறுவர் சிறுமிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.No comments:

Post Top Ad