மகாத்மா காந்தி உலகமெங்கும் வாழ்ந்த மக்களுக்கு சுதந்திர உணர்வை உண்டுபண்ணியவர்-செல்லையா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

மகாத்மா காந்தி உலகமெங்கும் வாழ்ந்த மக்களுக்கு சுதந்திர உணர்வை உண்டுபண்ணியவர்-செல்லையா


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் அடிமைப்பட்டு வாழ்ந்த மக்களுக்கு சுதந்திர உணர்வை உண்டுபண்ணியவர் என மட்டக்களப்பில் காந்தி சிலையை ஸ்தாபித்தவரும் முன்னாள் த.தே.கூ மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராஜதுரை தெரிவித்தார்.


மகாத்மா காந்தியின் 144வது ஜயந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு காந்தி சேவா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

மகாத்மா காந்தியை இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவராக மாத்திரம் கருத முடியாது.அவர் முழு உலகிலும் அடிமைப்பட்டு சுதந்திரத்திற்காக ஏங்கி நின்றவர்களுக்கு சுதந்திர உணர்வையும் விடுதலை உணர்ச்சியையும் ஏற்படுத்தியவர்.

நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது 1960ம் ஆண்டு ஒக்டோபர் 02ம் திகதி தியாகச் செம்மல் மகாத்மா காந்தியின் உருவச் சிலையை மட்டக்களப்பில் நிர்மாணிக்க கிடைத்ததையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன்.

மகாத்மா காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவராக இருந்தாலும் இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டியோ மகாத்மா காந்தியின் போராட்டத்திற்கு அமைவாக இலங்கைக்கும் சுதந்திரம் கிடைத்தது.

இந்தியா,இலங்கையில் மட்டுமல்ல சுதந்திர உணர்வுகளை உலகம் முழுவதும் வியாபிக்கச் செய்த பெருமை மகாத்மா காந்தி அடிகளாரையே சாரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post Top Ad