சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கான பணிகள் ஆரம்பம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கான பணிகள் ஆரம்பம்


சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கான சர்வதேச நிபுணர் குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்கா - ரஷ்யாவுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க சிரிய அரசு இணங்கியது.

யுத்த சூழலில் குறித்த நாட்டின் இரசாயன ஆயுதங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது இது முதல் முறையென அந்த திட்டத்தை செயற்படுத்தும் இரசாயன ஆயுத தடுப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த அமைப்பினர் பெரும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும் என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரியாவின் 19 இரசாயன ஆயுதம் வைக்கப்பட்டிருக்கும் தளங்களில் 7 தளங்கள் யுத்த வலயத்தில் இருப்பதாக சிரிய வெளியுறவு அமைச்சர் வலித் முவல்லம் கூறியிருந்தார். இந்த பகுதிகளில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
மேற்படி நிபுணர் குழு கடந்த திங்கட்கிழமை இரவு லெபனானில் தங்கிவிட்டு நேற்றைய தினமே சிரியாவை சென்றடைந்தது. இவர்கள் தமது செயற்பாடு குறித்து சிரிய வெளியுறவு அமைச்சில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு குறித்த தளங்களில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இதில் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் நிபுணர் குழுவால் அழிக்கப்படவுள்ளது. ரஷ்யா- அமெரிக்காவுக்கு இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்த செயற்பாடு எதிர்வரும் நவம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும். ஒருசில இரசாயன ஆயுதங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டு சிரியாவுக்கு வெளியில் வைத்து அழிக்கப்படவுள்ளன. ஏனையவை சிரியாவிலேயே அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் முடிவுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad