சூடானில் நடுரோட்டில் பொலிஸார் பெண்ணை சவுக்கால் அடித்து தாக்குதல் (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, October 04, 2013

சூடானில் நடுரோட்டில் பொலிஸார் பெண்ணை சவுக்கால் அடித்து தாக்குதல் (வீடியோ இணைப்பு)


நடுரோட்டில் பெண் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் சவுக்கால் அடிப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூடானை சேர்ந்த ஹலிமா என்ற பெண்ணே தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தலைநகரான கார்டோமில் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஹலிமா, முன்பின் தெரியாத நபரின் காரில் ஏறியதையடுத்து, நடுரோட்டில் வைத்து அனைவரின் முன்னிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சவுக்கால் அடித்துள்ளார்.
அப்போது, இனிமேல் காரிலேயே ஏறக்கூடாது என்று கூறிக்கொண்டே அடித்துள்ளார். வலிதாங்க முடியாமல் குறித்த பெண் கதறுகிறார்.
இதுகுறித்து கார்டோமின் கவர்னர் கூறுகையில், சவுக்கடி தண்டனை ஒழுங்காக நிறைவேற்றப்பட்டதா என்பது தெரியவில்லை.
ஆனால் ஷரியத் சட்டப்படி அப்பெண் தண்டிக்கப்பட வேண்டியவள் தான் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post Top Ad