இலங்கையில் இஸ்லாமிய வங்கிகள்; சந்தர்ப்பங்களும் சவால்களும்..! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

இலங்கையில் இஸ்லாமிய வங்கிகள்; சந்தர்ப்பங்களும் சவால்களும்..!


(மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்)
இஸ்லாமிய வங்கியியல் இந்த நூற்றாண்டுக்கான வங்கியியலாக திகழபோகும் வாய்ப்புகள் நிறையவே தெரிகின்றன. ஏற்கனவே உலகின் பலபகுதிகளில் வட்டியில்லா வங்கிகள் பெரிய அளவில் செயல்படத் துவங்கி விட்டன. இஸ்லாமிய வங்கிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. முதலீட்டின் அளவும் கூடி வருகிறது. 


இஸ்லாமியப் பொருளாதார வழி யில் செல்வத்தைப் பயன்படுத்துவ தற்கும் வளப்பங்கீட்டை சீர்படுத்து வதற்கும் நீதியையும் சமூகப் பொறுப்புக்களையும் நிறைவேற்று வதற்கும் சேவைகளை வழங்குவ தற்கும் செல்வங்களை ஒன்று திரட்டி தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற நிதிசார் நடவடிக்கைகளை இஸ்லா மிய வரையறைகளுக்குள் மேற் கொள்கின்ற நிறுவனமே இஸ்லா மிய வங்கியாகும்.
 இஸ்லா மிய வங்கி முறைமை (Islamic Banking system) என்பது பணப் பரிமாற்றலின்போது அல்லது கொடுக்கல் வாங்கலின்போது வட்டியிலிருந்து தவிர்ந்து கொள்ளக் கூடிய மத்திய மயப்படுத்தப்பட்ட ஒரு நிதிக் கொள்கையாகும். மற்றும் இஸ்லாமியப் பொருளாதாரத் திட் டத்தினுடைய நோக்கங்களை அடை ந்து கொள்வதற்கு உதவி புரியக் கூடிய வகையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுமாகும். 
பொருளியல் சமத்துவத்தை இது போதிக்கின்றது. இஸ்லாமிய அடிப் படைகளிலிருந்து கட்டியெழுப்ப பட்ட இது இலாபம்,நட்டம் ஆகிய இரண்டையும் பகிர்ந்து கொள்ளக் கூடிய உன்னத தன்மை வாய்ந்த தாகும். எனவேஇஸ்லாமிய வங்கி கள் PLS (Profit and Lost Sharing) என அடையாளப்படுத்தப்படுகின்றன. 
உலகம் முழுவதும் வட்டியை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய வங்கிகள் சகலதும் இஸ்லாமிய வங்கிச் செயற்பாட்டு பிரிவுகளை ஆரம்பித்து வருவது வரவேற்கத்தக்க ஒருமுன்னெடுப்பாக இருந்தாலும் இலங்கையைப் பொறுத்தவரை ஒரு சில துறை சாராதபிரபலங்களைக் கொண்ட ஆலோசகர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு ஒரு சில நிதிநிறுவனகள் இஸ்லாமிய நிதி முறைமைகளை சந்தைப் படுத்துவது குறித்து முஸ்லிம்கள் அவதானமாக இருக்க வேண்டும். 
தமக்குத் தெரிந்த பிரபலங்கள் வங்கிகளிலும்நிதி நிறுவனங்களிலும்   ஆலோசகர்களாகஇருக்கின்றார்கள் என்பதற்காகவும்இஸ்லாமிய அரபு பிரயோகங்கள்உபயோகத்தில்இருப்பதாலும்  மாத்திரம் முஸ்லிம்கள் வட்டியை அடிப்படையாக கொண்ட நிதி நிறுவனங்களின் இஸ்லாமிய பிரிவுகளில் முதலீடுகள் செய்வதில் கூடிய அவதானத்துடன் செயற்பட வேண்டும். 
முதலீடுகள் செய்வதாயின் கடமையில் உள்ள ஷரியாஹ்   ஆலோசகரின் நேரடி வழிகாட்டுதல் களை மிகவும் தெளிவாகபெற்றுக் கொள்ள வேண்டும்பொதுவாக இஸ்லாமிய நிதி செயற்பாடுகள் இறையச்சத்தையும்மறுமை பற்றிய உணர்வையும்,கேள்வி கணக்கு பற்றிய பயத்தையும் அடிப் படையாக கொண்ட இஸ்லாமிய சூழலை கவனத்திற்கொண்டே அறிமுகம்செய்யப் பட்டுள்ளது. இஸ்லாமிய வங்கி முறை என்பது ஆத்மீகத்திலிருந்து பிரித்தெடு க்க முடியாத ஒரு துறையாகும். 
முஸ்லிம் அல்லதவர்களுடனும்அவர்களால் நடாத்தப் படுகிற நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் கொடுக்கல் வாங்கல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இஸ்லாத்தில் பொதுவான தடைகள் விதிக்கப்படவில்லைஎனினும்கடமையில் பொறுப்புக் கூறக் கூடிய இஸ்லாமிய நிதி ஆலோசகர்கள் இருக்கின்ற நிறுவனங்களுடன் மாத்திரமே முஸ்லிம்கள் தமது வங்கி நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும். 
 இன்று  பல்வேறு நிதி நிறுவனங்கள் "முதாரபா" , "முஷாரகாஹ்" , "முராபஹாஹ்" , "இஜாராஹ்",  “முசாவமாஹ்” என்ற வங்கிச்செயற்பாடுகளை சந்தைப் படுத்துகின்றனசரியான பொறுப்புக் கூறக் கூடிய தெளிவான ஆலோசனைகளின்றி ,தமக்குத்தெரிந்த  பிரபலங்கள் வங்கியின்  ஆலோசனை சபையில் இருக்கிறார்கள் என்பதற்காக குறிப் பிட்ட ஒரு இஸ்லாமிய நிதி நிறுவனத்தில் முதலிட்ட பலர் நட்றாட்டில் விடப் பட்டமை நாடறிந்த உண்மையாகும். 
"முதாரபாஹ்" முதலீட்டு முறையை எடுத்து கொண்டால் இலாபத்தில் வங்கியாளர் "முதாரிப்"  கணிசமான  இணங்கிக் கொள்ளப்பட்ட ஒரு பங்கினை பெறுகிறார்ஆனால் நஷ்டத்தில் அவர் பங்கு கொள்வதில்லை, "ரப்புல் மால்" என அழைக்கப் படும் முதலீட்டாளர் முழு நஷ்டத்தையும் ஏற்றுக் கொள்வார்உண்மையில் இவ்வாறான ஒரு ஏற்பாடு இறைவனிடம் ஒவ்வொரு சத்ததிற்கும் கணக்கு காட்ட வேண்டுமே என்ற ஒரு சூழலில் மிகச் சரியாக அமுலில் இருக்கலாம். ஆனால்தற்போதைய சூழலில் துள்ளியமான கணக்கு அறிக்கைகள் "ரப்புல்மால்" முதலீட்டாளருக்கு வழங்கப் படுவதில்லை. 
இத்தகைய ஒரு சூழ் நிலையில் ஒரு வங்கி நஷ்டத்தை வாடிக்கையாளரின் தலையில் காட்டுவதற்கும்,  அதே போல் அந்த வங்கியிடம் "மூலதனம்" பெற்று வர்த்தகத்தில் ஈடு பட்ட ஒருவர் அல்லது பலர் வங்கியிற்கு வங்குரோத்து கணக்கு காட்டுவதற்கும் இடமுண்டு.. ! இரண்டு சூழ் நிலையிலும் நஷ்டம் முதலீட்டாளரை வந்து சேரும்எனவே இவ்வாறானஇஸ்லாமல்லாத சூழ் நிலைகளில் குறிப் பிட்ட வங்கிகளின் பின்புலத்தைஅதனிடமுள்ள அசையும் அசையா சொத்துக் களின் பெறுமதியினைமத்திய வங்கியுடனான வகை முறை கூறும் உடன்பாடுகளை ஓரளவுக்காவது முஸ்லிம் கல்தெரிந்திருக்க வேண்டும். 
 அதே போன்று "முஷாரகாஹ்" என்ற கூட்டுத் தொழில்வர்த்தக  முயற்சிக்கான இஸ்லாமிய பிரயோகம் இன்று மிகவும் பரந்த பரிமாணத்தில் கையாளப் படுகிறதுகுறிப்பாக பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரிதும் இந்த முறை கையாளப் படுகிறது;குறிப்பாக சுகூக் எனும் பங்கு வர்த்தக முறிகளை கருவிகளை விற்பனை செய்து பாரிய தோலின் முயற்சிகளுக்கான நிதி மூலங்கள் நவீன உலகில் இந்த அடிப்படையல் வெற்றிகரமாக பெறப் படுகிறதுஇலங்கையைப் பொறுத்த வரையில் பாரம்பரிய வங்கிகள் தாம் "முஷாரகாஹ்" ,அல்லது "முதாரபாஹ்"முசாவமத்"   அடிப்படையில் திரட்டுகின்ற மூலதனத்தை எத்தகைய பங்குச் சந்தை வர்த்தக முயற்சிகளில் பயன் படுத்துகிறார்கள் என்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும். 
பொதுவாக ஒரு நாட்டின் மத்திய வங்கியில் சகல நிதி நிதி நிறுவனங்களும் வங்கிகளும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அரச மற்றும் தனியார் வங்கிகளின் வட்டி விகதம் மத்திய வங்கியின் வரை முறைகள்நிர்ணயங்களுக்கு உட்படுகின்றது போல் இஸ்லாமிய நிதி நிறுவனங்களுக்கு சுதந்திரமான இலாபப் பங்கீடு நிலையான மற்றும் சேமிப்பு வாய்ப்புகளுக்கு பங்கீடு செய்யப் படுவதில் வரையறைகள் இருப்பதால் இஸ்லாமிய முதலீட்டாளர் கலப்பட வங்கி முறைகளால் பாதிக்கப் படுகின்றார். 
மத்திய வங்கியின் ஆளுகைக்கு உட்பட்டு இலாபப் பங்கீட்டை இஸ்லாமிய வங்கிகள் அல்லதுதேசிய மற்றும் தனியார் வங்கிகளிலுள்ள இஸ்லாமிய கொடுக்கல் வாங்கல் பிரிவுகள் கட்டுப் படுத்துகின்ற ஒரு நிலைமையில் முதாரபாஹ் முசாவமாஹ் ,முஷாரகாஹ்முராபஹாஹ் ஈஜார்  என சகல இஸ்லாமிய நிதி நடவடிக்கைகளிலும் முஸ்லிம்கள் வஞ்சிக்கப் படுவார்கள். 
தற்போது இஸ்லாமிய நிதியியல் அல்லது வங்கி முறை என அழைக்கப் படுகின்ற நிறுவன ரீதியலான தொழிற்பாடுகள் பாரம்பரிய நிதியியல் வங்கிச் சேவைகளுக்கான உடனடி மாற்றீடுகளாகவே காணப் படுகின்றன. அடிப்படையில் முற்று முழுதான இஸ்லாமிய பொருளாதார மூலதன கோட்பாடுகளைக் கொண்ட காலாகாலத்தில் பரிணாமம் பெற்ற இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் என அடையாள படுத்த முடியுமான நிறுவனங்கள் உலகில் இல்லை என்றே கூற வேண்டும். 
இவ்வாறான உடனடி மாற்றீட்டு வங்கிச் சேவைகளை வழங்கும் பொழுது பாரம்பரிய வங்கிகள் பெறுகின்ற அல்லதுகொடுக்கின்ற இலாபப் பங்கீடுகளை ஒத்த நடைமுறைகளை இஸ்லாமிய வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்த சூழ் நிலைகள் உள்ளன.
உதாரணமாக பாரம்பரிய வங்கியொன்றில் சேமிப்புக் கணக்கொன்றை வைத்திருப்பவர் அல்லது குறிப்பிட்ட தவணைக்கு நிலையான வைப்பீட்டைச் செய்துள்ள  ஒருவர் மத்திய வங்கி நிர்ணயம் செய்துள்ள  5% அல்லது 10 %  வட்டியை இலாபமாகப் பெறுகிறார்.  இங்கு வைப்பிலிடப் பட்டுள்ள மூலதனத்தை வைத்து வட்டி விகிதம் நிர்ணயிக்கப் படுகிறது.  
இஸ்லாமிய வங்கியொன்று முத்தாரபா சேமிப்புக் கணக்கில் இடப்பட்டுள்ள மூலதனத்தை முதலீடு செய்து கிடைக்கும் இலாபத்தில் 40 % அல்லது 60 % விகிதத்தை தருவதாக வாடிக்கையாளருடன் உடன் படுகிறது. அனால் பாரம்பரிய வர்த்தக வங்கிகள் அல்லது சேமிப்பு வங்கிகளுக்கு விதிக்கப் பட்டுள்ள இலாபமீட்டும் அல்லது பங்கிடும் வரைமுறைகள் இஸ்லாமிய வங்கிகளது தொழிற் பாட்டையும் கட்டுப் படுத்துவதால் வாடிக்கையாளர் வஞ்சிக்கப் படுகின்ற சந்தர்ப்பம் நிறையவே காணப் படுகிறது. 
இங்கு இஸ்லாமிய வங்கியொன்று பத்து இலட்ச ரூபாய் முதலீடு செய்து மாதம் ஒரு இலட்சம் ரூபாய் நிகர வருமானம் ஈட்டியதாக வைத்துக் கொள்வோம் இங்கு வாடிக்கையாளருக்கு இணங்கிக் கொள்ளப் பட்ட விகிதாசாரமான 40 % அல்லது 60 % வீதத்திற்கேற்ப ஒரு போதும் வழங்குவதில்லை மாறாக பாரம்பரிய வங்கிகள் போல் 4%  6%  வட்டி           வீதத்திற்கு நிகரான இலாபத்தையே அவற்றால் பங்கீடு செய்ய முடிகிறது. இங்கு ஆபத்தான விடயம் என்னவென்றால் இலாபத்திலும் சரியானபங்கினைப் பெற்றுக் கொள்ள முடியாத வாடிக்கையாளர் குறிப்பிட்ட வியாபார முயற்சியில் நஷ்டம் ஏற்படின் அல்லது  நிதி நிறுவனம் திவாலாகும் நிலையில் மூலதனத்தையும் இழக்கின்ற நிலை ஏற்ற்படுகின்றது. 
இவ்வாறன ஒரு நிலைமையில் பாரம்பரிய வட்டியுடனான வங்கிகளிலுள்ளஉத்தரவாதங்களும் இல்லாத அநீதிகள் மிகுந்த ஒரு வங்கி முறை தோற்றம் பெறும்.என்னை பொறுத்தவரை இஸ்லாமிய வங்கிமுறைக்கு எதிராக ஒரு சதி அல்லது போர்பிரகடனம் செய்யப் பட்டுள்ளதாஎன்ற சந்தேகம் எழுந்துள்ளது....! 
முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தீமையான சில அம்சங்களை நடைமுறையிலுள்ள வங்கி முறைகளும்முதலீட்டு நிதி நிறுவனங்களும்காப்புறுதி நிறுவனங்களும் கொண்டிருப்பதால் இஸ்லாமிய அறிஞர்கள் நிதி மூலதனத்தை மையமாக வைத்து வர்த்தகம் செய்யும் வங்கி முறைகள் குறித்து சிறந்த தெளிவினைப் பெற்றுக் கொள்ள வேண்டும்! 
உற்பத்தி மூலதனத்தை உண்மை மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நடவடிக்கைகள்  குறித்து சமூகத்திற்கு சரியான தெளிவுகளை ஏற்படுத்த வேண்டும்! நடைமுறையிலுள்ள பாரம்பரிய வங்கிகளின் மற்றும் நிதி நிறுவனங்களின்தொழிற்பாடுகள் சேவைகளுக்கான மாற்றீடுகளை அறிமுகம் செய்யவே இஸ்லாமிய வங்கிகள் முனைவதாக தெரிகிறது,மாறாக உற்பத்தி மற்றும் வளங்களை மூலதனமாகக் கொண்ட பொருளாதார வர்த்தக சேவைகளை இஸ்லாமிய நிதியியலாளர்கள் ஆராய்ந்து அறிமுகம் செய்ய வேண்டும்! 
உலமாக்கள் பிரபலங்கள் தனித்தனியாக ஷரியா ஆலோசனை சபைகளில் இருப்பதில் தவறில்லை ஆனால் நிதியியல்வல்லுனர்களையும் ஷரயாஹ் விற்பன்னர்களையும் கொண்ட ஒரு ஆலோசனை சபையை தேசிய அளவில் முஸ்லிம்கள் ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் ஏற்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது...! 
இலங்கையில் ஆழமான ஷரியாஹ் அறிவுடன் கூடிய இஸ்லாமிய நிதியியல் வல்லுனர்களின் தேவை இன்று அதிகரித்து காணப் படுகிறதுஇஸ்லாமிய கலாபீடங்கள் தமது கற்கைகளில் இஸ்லாமிய நிதியியலை அதன் நவீன கால பிரயோகத்திற்கு ஏற்ப கற்பித்தல் வேண்டும். வங்கிகளைப் பொறுத்தவரை ஆலோசனை சபைகளில் மாத்திரமன்றி வங்கிக் கட்மைய்களிலும் பொறுப்புக் கூறக் கூடிய தகுதி வாய்ந்த துறை சார்ந்த இஸ்லாமிய நிதியியல் வல்லுனர்களை நியமனம் செய்ய வேண்டும். 
இஸ்லாமிய வங்கிச் சேவைகளுக்கு ஆலோசகர்களாக செயற்படுபவர்கள் தமது கடமைப் பொறுப்புகள் குறித்த தெளிவான உடன்பாடுகளை வங்கிகளுடன் மேற்கொள்ளவேண்டும்குறிப்பாக இஸ்லாமியப் பிரிவின் அல்லது நிதி நிறுவனத்தின் யாப்பு,தம்மிடமிருந்து எதிர்பார்க்கப் படுகின்ற நிபுணத்துவ பங்களிப்புவங்கியின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்த தெளிவான (*பட்டய) கணக்கு அறிக்கைகள்மாதாந்தகாலாண்டுஅரையாண்டு,  வருடாந்த அடைவு அறிக்கைகள் என சகலஆவணங்களும் அவர்களுக்கு வழங்கப் பட வேண்டும். 
 அல்லாஹ்வை எந்த நிலையிலும் அஞ்சி நடக்கக் கூடிய  தனி நபர்கள் குழுக்கள் ,ஹலால் ஹராம் குறித்த அறிவும் தெளிவும் உள்ள தனி நபர்கள் குழுக்கள்அமானிதம் குறித்த தெளிவும் விழிப்புமுள்ள தனி நபர்கள் குழுக்கள்ஹராமாக அடுத்தவர் பொருளை பணத்தை அபகரிக்காத தனி நபர்கள் குழுக்கள்அளவை  நிறுவையில் மோசடி செய்யாத தனி நபர்கள் குழுக்கள்,கலப்படம் பதுக்கல் செய்வது கொடிய பாவம் என்று அறிந்த தனி நபர்கள் குழுக்கள் ஒரே பொதுவான ஷரீஆவை கோட்பாடாகக் கொண்ட தனி நபர்கள் குழுக்கள் தமது கொடுக்கல் வாங்கல்களைவர்த்தக விவசாய நடவடிக்கைகளை தங்களுக்குள் நம்பிக்கை நாணயம் நேர்மை எல்லாவற்றிற்கும் மேலாக இறையச்சம் ஆகிய ஆன்மீக உணர்வுகளுடன் கூடியசூழலில் மேற்கொள்வதற்கும் தமது கொள்கை கோட்பாடுகளுக்கு அந்நியமான சூழ் நிலைகளில் அந்நியமான தரப்புகளுடன் மேற்கொள்வதற்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. 
தற்போதைய சூழ்நிலையில் கிராமங்கள் நகரங்கள் தோறும் மஸ்ஜித்களை  மையமாகக் கொண்ட இஸ்லாமிய கூட்டறவு வங்கி முறையினை சிறு தொழின் முயற்சிகளுக்கான நிதியியலை (Micro Finance) முஸ்லிம்கள் தங்களுக்குள் அறிமுகப் படுத்திக்கொள்வது மிகவும் சிறந்த ஒரு முன்னெடுப்பாக அமையும்.! இது பலநூறு சமூக அநீதிகளை ஒழிக்கவும்வறுமையை ஒழிக்கவும்மாதர்கள் தொழிலுக்காக  கடல் கடந்து மஹ்ரேம் இல்லாது செல்வதை தடுக்கவும்அடுத்த சமூகங்களுக்குஇஸ்லாமிய தீர்வுகளை அறிமுகப் படுத்தவும் பலமான அடித்தளமாக அமையும்...இன்ஷா அல்லாஹ்...! 
இறுதியாகஜம்மியத்துல் உலமா உட்பட  ஏனைய இஸ்லாமிய நிறுவனங்கள் "சிறுபான்மையினருக்கான பிக்ஹு" குறித்து ஆராயும் குழுவொன்றை அமைத்து  இலங்கை போன்ற ஒரு நாட்டில் இஸ்லாமிய நிதியியல் தொடர்பான ஆய்வுகளை  மேற்கொள்வதோடு நாடு முழுவதும் குத்பாஹ் பிரச்சாரங்களுக்கான ஒரு தலைப்பாகவும் இதனை உள்வாங்குவதன் மூலம் பொது மக்களை அறிவுறுத்த வேண்டும். என வலியுறுத்த விரும்புகின்றேன்.


No comments:

Post Top Ad