இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவன் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவன்


2013ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் காலி மஹிந்த கல்லூரி மாணவன் சந்தரு தத்சர பலஹேவா 198 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.


புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி நாடு பூராகவும் நடைபெற்றது.2836 மத்திய நிலையங்களில் நடை பெற்ற பரீட்சையில் 3இ29இ725 மாண வர்கள் தோற்றினர்.

 இதன்படிஇ நேற்று பரீட்சை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.196 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தை மூன்று மாணவர்கள் பெற்றுள்ளனர். கொடகம சுபாரதி வித்தியாலய மாணவி சவிந்யா கிம்ஹானிஇ கேகாலை ஹெட்டிமுல்ல பண்டாரநாயக்க கனிஷ்ட வித்தியாலய மாணவி ஜிலானி முனசிங்கஇ பெலிஹுல்ஓயஇ கரகஸ்தலாவ கல்லூரி மாணவன் ஹேசான் தர்மரத்ன ஆகியோர்களே இவ்வாறு இரண்டாமிடத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
தமிழ் மொழி மூலம்
ளுரடியசயவாi உழில உழிலதமிழ் மொழி மூலம் 194 புள்ளிகளே கூடுதலான புள்ளிகளாக பெறப்பட் டுள்ளது. மட்டக்களப்பு வின்சன் கல்லூரி மாணவி கவிலாஷனாஇ வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவி அருசன் அருவி ஆகியோர் இவ்வாறு அதிக புள்ளி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவன் ரணேஷ் ஆதித்தன் மற்றும் புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மாணவி சதாசிவம் தனுசிக்கா ஆகியோர் 191 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவன் மசாப் அமீன்இ மடவள பஸார் அல்- முனவ்வரா ஆரம்பப் பாடசாலை மாணவி ஹுதா பெளசர் ஆகியோர் 190 புள்ளிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முயஎடையளாயயெயாழ். மாவட்டத்தில் ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாலய மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார். குறித்த பாடசாலையில் இம்முறை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரி மாணவன் சனுஜன் 193 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.No comments:

Post Top Ad