அரசுக்குள் இருக்கும் சிலர் இனவாதிகளையும் தமிழ் அரசியல்வாதிகளையும் மகிழ்வித்து வருகின்றனர் ;பிக்குகள் முன்னணி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, October 04, 2013

அரசுக்குள் இருக்கும் சிலர் இனவாதிகளையும் தமிழ் அரசியல்வாதிகளையும் மகிழ்வித்து வருகின்றனர் ;பிக்குகள் முன்னணி

(tw)
அரசாங்கத்திற்குள் இருக்கும் சில அரசியல்வாதிகள் பழைய அரசியல் கொள்கைகளை கொண்டுள்ளதுடன் இனவாதிகளையும் தமிழ் அரசியல்வாதிகளையும் மகிழ்வித்து வருவதாக தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் செயலாளர் பொங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்தார்.
தேசிய அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பு சவ்சிறிபாயவில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையை மற்றுமொரு சூடானாகவும் திமோராகவும் மாற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
கியூபாவும் வெனிசூலாவும் தமது சொந்த காலில் நின்று வெற்றி பெற்றது போல் இலங்கையாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியும்.
இலங்கையின் அமைவிடம் காரணமாக இலங்கை தனித்து வெற்றி பெற்று விடும் என்ற அச்சம் மேற்குலக நாடுகளுக்கு உள்ளது.
இதன் காரணமாகவே அந்த நாடுகள் பல்வேறு சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
சர்வதேச ரீதியில் சதித்திட்டங்களை மேற்கொண்டு இலங்கை ஸ்தம்பிதமடைய செய்ய முயற்சித்து வருகின்றனர்.
எனினும் இலங்கையில் அரசியல்வாதிகள் இந்த நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் அதிகாரத்தை கைப்பற்றும் செயற்பாடுகளில் மட்டும் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜனாதிபதியை போன்று ஏனைய அரசியல்வாதிகளும் நாட்டுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும். அதிகாரம் கையில் இருந்தாலும் சர்வதேச சக்திகள் எம்மை ஆட்கொள்ள பார்க்கின்றன.
வாசுதேவ மற்றும் விக்ரமபாகு போன்றவர்களின் செயற்பாடுகள் இலங்கையை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளுக்கு உந்து சக்தியை கொடுக்கின்றன என்றார்.

No comments:

Post Top Ad