முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரம் தொடர்பில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, October 05, 2013

முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரம் தொடர்பில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு


கொழும்பு பிரதேச முஸ்லிம்களின் ஜனாஸா விவகாரம் தொடர்பில் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இதன் பிரகாரம் கொழும்பிலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலிருந்து ஜனாஸாக்களைப் பெற்றுக் கொள்ள தாமதமேற்பட்டால் அல்லது ஜனாஸாக்கள் தொடர்பில் வேறு ஏதும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டால் அவைகளை உரிய நேரத்தில் எதுவித சிரமங்களுமின்றி பெற்றுக் கொடுப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் பிரதி அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

இது சம்பந்தமான அறிவித்தல் கொழும்பு மாவட்டத்திலுள்ள பிரதான ஜும்ஆப் பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post Top Ad