இரு முஸ்லிம்களின் வீடுகள் கலகக்கார கும்பலால் தீக்கிரை ; மியன்மாரில் பதற்றம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, October 01, 2013

இரு முஸ்லிம்களின் வீடுகள் கலகக்கார கும்பலால் தீக்கிரை ; மியன்மாரில் பதற்றம்


இரு முஸ்லிம்களின் வீடுகள் கலகக்கார கும்பலால் தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து வடமேற்கு மியன்மாரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


கரையோர நகரான தன்வாவில் பெளத்தர் ஒருவர் தம்மை முஸ்லிம் கடை உரிமையாளர் ஒருவர் வாய்மூலம் அவமதித்ததாக பொலிஸில் முறையிட்டதைத் தொடர்ந்தே கலவரம் வெடித்ததாக பதற்றம் கொண்ட ரகின் மாநிலத்தின் அரச பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஞாயிற்றுக்கிழமை இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த முஸ்லிம் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஜுன் மாதம் தொடக்கம் மியன்மாரில் தொடரும் இனப்பதற்றம் காரணமாக 237 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 150,000 க்கும் அதிகமானவர் வீடுகளை இழந்துள்ளனர்.

No comments:

Post Top Ad