கூட்டமைப்பின் மேலதிக ஆசனம் முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்கப்பட்டதை இந்திய நாளிதழ் வரவேற்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, October 03, 2013

கூட்டமைப்பின் மேலதிக ஆசனம் முஸ்லிம் வேட்பாளருக்கு வழங்கப்பட்டதை இந்திய நாளிதழ் வரவேற்பு

(tw)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேலதிக ஆசனம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை, இந்தியாவின் தி ரைம்ஸ் ஒப் இந்தியா நாளிதழ் வரவேற்றுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கும், மற்றுமொரு ஆசனத்தை வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடையில் சுழற்சிமுறையில் பகிரவும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டமை தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவினை வலுப்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad