சண்டே லீடர் பத்திரிகை ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் பத்திரிகையிலிருந்து நீக்கம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, October 05, 2013

சண்டே லீடர் பத்திரிகை ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் பத்திரிகையிலிருந்து நீக்கம்

(tw)
வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து நாட்டில் இருந்து வெளியேறிய சன்டே லீடர் பத்திரிகையின் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மையில் அபேவிக்ரமவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் லீடர் வெளியீட்டு நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.
அந்த பத்திரிகையில் பொருளாதார செய்தியாசிரியரும் மந்தனாவின் கணவருமான ரொமேஷ் அபேவிக்ரமவும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மின்னஞ்சல் மூலம் இந்த பணி நீக்கம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எந்த காரணத்திற்கான அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர் என்ற தெளிவான காரணம் அதில் குறிப்பிடப்படவில்லை.
மந்தனா, அவரது கணவர் மற்றும் மகள் ஆகியோருடன் கடந்த செப்டம்பர் மாதம் வட அமெரிக்க நாடொன்றுக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஓகஸ்ட் 24 ஆம் திகதி அவரது வீடு ஆயுததாரிகளினால் தாக்கப்பட்டதுடன் இந்த சம்பவத்துடன் அரசாங்கத்தின் முக்கிய இளம் அரசியல்வாதிக்கு தொடர்பிருப்பதாக பேசப்பட்டது.
சன்டே லீடர் பத்திரிகை 2012 ஆம் ஆண்டு ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவரினால் கொள்வனவு செய்யப்பட்டது.
இந்த பத்திரிகையின் ஸ்தாப ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க தனது அலுவலகத்திற்கு சென்றுக்கொண்டிருந்த போது 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad