மட்டு-மாவட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும் முதலிடம் பெற்ற முரளிதரன் கவிலாஷ்னா -(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

மட்டு-மாவட்ட மட்டத்திலும் வலய மட்டத்திலும் முதலிடம் பெற்ற முரளிதரன் கவிலாஷ்னா -(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

2013 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றின் படி மட்டக்களப்பு வின்சன் உயர்தர மகளீர் தேசியப் பாடசாலை மாணவி செல்வி முரளிதரன் கவிலாஷ்னா 193 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு கல்வி வலயத்திலும் மாவட்ட மட்டத்திலும் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.


இவர் படுவாங்கரை விளாவெட்டுவானைச் சேர்ந்தவரும் கல்லடியில் வசிகப்பவரும் காத்தான்குடி வைத்தியசாலையில் பல் வைத்திய நிபுணராக கடமையாற்றும் கே.முரளிதரன் மற்றும் மஞ்சந்தொடுவாய் ஆயர்வேத வைத்தியசாலை வைத்தியர் திருமதி காயத்ரி முரளிதரன் ஆகியோர் புதல்வியுமாவார்.

நேற்று பரீட்சைப் பெறுபேறு வெளியாகியதை அடுத்து 193 மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற செல்வி முரளிதரன் கவிலாஸ்னாவுக்கு மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி வாழ்த்துத் தெரிவித்து பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

இவர் டென்னிஸ்,நடனம்,அபிநயம் போன்றவற்றில் தேசிய மட்டத்தில் எடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாவட்ட மட்டத்தில்; புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மாணவி சதாசிவம் தனுசனா ,ஏறாவூர் றகுமானியா வித்தியாலய மாணவரொருவர்  ஆகியோர் 191 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனரர்.நான்காம் இடத்தை காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மாணவி பாத்திமா மம்தூஹா பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad