அகில இலங்கை ரீதியில் சித்திபெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, October 04, 2013

அகில இலங்கை ரீதியில் சித்திபெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து


2013 ஐந்தாந்தர புலமைபரிசில் பரீட்சையில் ஆகக்கூடுதலான புள்ளிகளைப்பெற்று அகில இலங்கை ரீதியில் சித்திபெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


198 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற காலி மஹிந்த கல்லூரி மாணவன் சந்தரு தத்சர பலஹேவாஇ கொடகம சுபாரதி வித்தியாலய மாணவி சவிந்யா கிம்ஹானிஇஇரத்தினபுரி கரகத்தலாவை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹேஷான் சானுக தர்மரத்ன உட்பட நாடளாவிய ரீதியில் சிறந்த பேறுபேறுகளைப் பெற்ற 19 மாணவர்கள் நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தனர் .

இந்த சந்திப்பின் போது மேற்படி மாணவரகளின் திறமையை பாராட்டிய ஜனாதிபதிஇ அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அத்துடன் மக்கள் வங்கியினால் அன்பளிப்பா வழங்கப்பட்ட தலா ஒரு லட்சம் ரூபாவுக்கான காசோலைகளையும் ஜனாதிபதி இந்த மாணவர்களுக்குக் கையளித்தார். சிங்கர் கம்பனியினால் வழங்கப்பட்ட மடிக்கணனிகள் மற்றும் அகராதிகள் போன்றவையும் ஜனாதிபதியினால் இவர்களுக்கு கையளிக்கப்பட்டன.

கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இமக்கள் வங்கியின் தலைவரான ஜனாதிபதியின் செயலணிப் பிரானி காமினி செனரத் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
No comments:

Post Top Ad