சதாம் ஹூசைனை பற்றி புரளியை கிளப்பியுள்ள இங்கிலாந்து பத்திரிகை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, October 01, 2013

சதாம் ஹூசைனை பற்றி புரளியை கிளப்பியுள்ள இங்கிலாந்து பத்திரிகை


ரஷ்யாவில் உள்ள விமான நிலையம் ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கும் 20 பில்லியன் யூரோக்கள்   ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சர்ச்சையை இங்கிலாந்து பத்திரிகை கிளப்பியுள்ளது.

இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான 'மிரர்' வெளியிட்டுள்ள செய்தியின் படி, ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து பார்சின் மோட்லாக் என்ற மாபியா அசாமி ஒருவன் கடந்த 2007ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள ஷெரமெட்யெவோ விமான நிலையத்திற்கு இந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளான்.
பணத்தை அனுப்பிய ஆசாமி கடந்த 6 ஆண்டுகளாக அந்த பார்சலை பெற்றுக்கொள்ள வராததால் 100 யூரோக்கள் கொண்ட கட்டுகளாக உள்ள அந்த பார்சல் ரஷ்ய விமான நிலைய கிடங்கில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பணத்தை அனுப்பி வைத்த ஆசாமி ஈரான் நாட்டை சேர்ந்தவன் என்று தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் பொலிஸாரால் தேடப்படும் அவனிடம் இந்த பணத்தை ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தனது எதிர்கால தேவைக்காக தந்தனுப்பியிருக்கக் கூடும் என அந்த பத்திரிகை சந்தேகம் எழுப்பியுள்ளது.

No comments:

Post Top Ad