பொலிஸாரை தாக்கிய 8 பேர் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, October 04, 2013

பொலிஸாரை தாக்கிய 8 பேர் கைது

(vi)
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சந்தியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது வாள்வெட்டு மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் இருவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஆனைக்கோட்டைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில ஈடபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிசார் மறிக்க முற்பட்ட வேளையில் பொலிசாருக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கும் இடையே இடம்பெற்ற இழுபறியைத் தொடர்ந்து குறித்த நபர்கள் பொலிசாரை வாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்தில் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்தளையைச் சேர்ந்த வசந்த அபேயரத்தின (வயது37) என்பவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த மானிப்பாய் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

No comments:

Post Top Ad