கடந்த மாதம் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிரியா மக்கள் லெபனானில் அகதிகளாக - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, October 01, 2013

கடந்த மாதம் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிரியா மக்கள் லெபனானில் அகதிகளாக


சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் குடும்பத்தினர் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் பதவி விலகி ஜனநாயக ஆட்சி மலரவும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது அது கலவரமாக மாறி 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 


போராட்டக்காரர்களில் சிலர் அண்டை நாடுகளில் இருந்து போராயுதங்களை வாங்கி ராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். அதை அதிபர் ஆசாத் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து ராணுவத்தை ஏவி பொதுமக்களை கொன்று குவித்து வருகிறார். 

ராணுவம் நடத்தி வரும் வான் வழி, ஏவுகணை மற்றும் குண்டு வீச்சு தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். உயிர் பிழைத்த பலர் உடல் உறுப்புகள் சிதைந்து ஊனமுற்றவர்களாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

பல லட்சம் மக்கள் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான துருக்கி, லெபனானில் தஞ்சம் அடைந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. சபை கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதில், அண்டை நாடான லெபனானுக்கு வரும் சிரியா அகதிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. சொந்த நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை சுமார் 5 லட்சமாக இருக்கும் வேளையில் சிரியாவில் இருந்துவந்து தஞ்சமடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக உள்ளதால் அகதிகளின் பராமரிப்புக்கு உலக நாடுகள் உதவி செய்ய வேண்டும் என லெபனான் பிரதமர் மிக்கேல் சுலைமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த (செப்டம்பர்) மாதத்தில் மட்டும் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிரியா மக்கள் லெபனான் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரத்தின்படி, ஐ.நா. அகதிகள் உயர் கமிஷனில் பதிவு செய்து லெபனானில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள சிரியா மக்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

No comments:

Post Top Ad