தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இணையத்தில் வெளியாகும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, October 01, 2013

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இணையத்தில் வெளியாகும்

(ad)
இவ்வருடம் முதல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் உலக சிறுவர் தினமான இன்று (01) வெளியிடப்படும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும். 

2013ஆம் ஆண்டு தொடக்கம் வருடந்தோறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அன்றைய தினத்தில் வெளியிடுமாறும் அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

இதற்கமைய, இன்று மாலைக்குள் பரீட்சை பெறுபேறுகளை இணையதளத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்தார். 

பரீட்சை பெறுபேறுகள் www.doenets.lk என்ற இணையதளத்திற்கூடாக பார்வையிட முடியும். ஒகஸ்ட் 25ஆம் திகதி நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். 

இப்பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 386 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post Top Ad