37.மில்லியன் நிதியில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, October 04, 2013

37.மில்லியன் நிதியில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு

(A.W.இர்பான்)

திருகோணமலை மாவட்டத்தில் 37.மில்லியன் நிதியில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நீர்ப்பாசன திட்டங்களை கிழக்கு மாகாணஆளுனர் ரியல் எட்மிரல் மொஹான் விஜயவிக்ரம கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் ஏ மஜீட் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு எதிர் வரும் 12ம் திகதி மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகிழக்கு மாகாண  வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன வீடமைப்பும் நிர்மாணமும் கிரமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் ஊடாக மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் யுத்த சு10ழ் நிலையாலும் இயற்கை அனர்த்ததினாலும் பாதிக்கப்பட்ட நான்கு நீர் திட்டங்கள் 37.மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.


                        குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பெரிய குளம்ää தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரில்   பரவி பாஞ்சான் குளம் கல்மெட்டியாவ குளம் கிளிக்குஞ்சி ஆறு அனைக்கட்டு ஆகிய நீர்ப்பாசன திட்டங்கள் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் அழைப்பின் பெயரில்  கிழக்கு மாகாண ஆளுனர் ரியல்; எட்மிரல் மொஹான் விஜயவிக்ரம கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் ஏ மஜீட் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு எதிர் வரும் 12ம் திகதி மக்களிடம் கையளிக்க படவுள்ளன. 


இந் நிகழ்வில் அதிதிகளாக புத்த சாசன மத விவகார பிரதி அமைச்சர் எம்.டி.எஸ்.குணவர்த்தன கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியவதி கலப்பதி மாகாண சபை உறுப்பினர்களான  ஆர்.எம். அன்வர் எஸ்.எல்.எம்.ஹசன்(மௌலவி) நவரத்ணராஜா  ஜெயந்த விஜயசேகர பியந்தபத்திரன ஆகியோரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயளாளர் ஏ.எச்.எம்.அன்சார் கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர்  எஸ். திலகராஜா தம்பலகாமம் பிரதேச செயளாளர் டி.ஆர்.எம். ரோஹான் திஸநாயக்க தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.சுபியான் குச்சவெளி பிரதேச செயளாளர் உமாமகேஸ்வரன் குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக்  உட்பட பல உயர் அதிகாரிகளும் விவசாய அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


குறித்த நான்கு நீர்ப்பாசனத் திட்டங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதன் மூலம் 2000ம்.ஏக்கர் வயல் காணிகள் ஒரு வருடத்திற்கு இரண்டு தடவை நெற்பயிர் செய்கை செய்வதற்கு கூடிய நிலமை உறுவாகியுள்ளதாகவும் இன் நீர்ப்பாசன திட்டங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்த கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களுக்கு விவசாய அமைப்புகள் நன்றி தெறிவித்துள்ளனர். No comments:

Post Top Ad