ஈராக்கில் 2 நாளில் 23 பேர் மரணதண்டனை நிறைவேற்றம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, October 03, 2013

ஈராக்கில் 2 நாளில் 23 பேர் மரணதண்டனை நிறைவேற்றம்


ஈராக்கில் கடந்த மாதத்தில் மட்டும் 2 நாளில் 23 பேர் தூக்கிலிடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈராக் நீதித்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈராக்கில் இந்த ஆண்டு மட்டும் 90 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
செப்டம்பர் 22 மற்றும் 26 ஆம் திகதிகளில் மட்டும் 23 பேர் தூக்கிலிடப்பட்டனர்.
இவர்களில் 20 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள்.
மீதமுள்ள 3 பேர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக மரண தண்டனை பெற்றவர்கள் என்று தெரிவித்தார்.
மேலும் ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் நவி பிள்ளை, ஈராக்கில் உள்ள நீதித்துறை செயல்பாடுகள் முறையாக செயல்படவில்லை என்றும், ஏராளமான பேர் பொலிஸாரின் சித்ரவதை மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கு பயந்து குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad