காத்தான்குடி கோட்ட மட்டத்தில் 190புள்ளிகளைப் பெற்று முதலாமிடம் பாத்திமா மம்தூஹா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

காத்தான்குடி கோட்ட மட்டத்தில் 190புள்ளிகளைப் பெற்று முதலாமிடம் பாத்திமா மம்தூஹா (படங்கள் இணைப்பு)


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்ட தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மாணவி அப்துல் மஜீத் பாத்திமா மம்தூஹா 190புள்ளிகளைப் பெற்று கோட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 4ம் இடத்தையும் பெற்றுள்ளார்.


இவர் காத்தான்குடி 04ம் குறிச்சைச் சேர்ந்த பிரபல படப்பிடிப்பாளர் எஃப்.எம்.மஜீத் என அழைக்கப்படும் எம்.ஐ.ஏ.மஜீத் மற்றும் காத்தான்குடி அல்அமீன் வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு ஆசிரியையாக கடமையாற்றும் எம்.பீ.எம்.அமீனா(ஆசிரியை) தம்பதிகளின் புதல்வியாவார்.

இவர் கல்வியில் அதிகம் ஆர்வம் காட்டிவருவதும் 2012 “சமுர்த்தி கெகுளு” சிறுவர் தினப் போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad