புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடிக் கோட்டத்தில் 174பேர் சித்தி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

புலமைப் பரிசில் பரீட்சையில் காத்தான்குடிக் கோட்டத்தில் 174பேர் சித்தி


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

வெளியாகியுள்ள 2013ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கோட்டத்தில் 174பேர் பரீட்சையில் சித்தியடைந்து சென்ற வருடத்தை விட இவ்வருடம் முன்னேற்றம் கண்டுள்ளதாக காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எம்.சுபைர் தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள 30பாடசாலைகளில் 174பேர் சித்தியடைந்துள்ளனர்.

இதில் காத்தான்குடி மீரா பாலிகா மஹா வித்தியாலயத்தில் 39பேரும்ääகாத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் 22பேரும்,புதிய காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் 13பேரும்,காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்தில் 12பேரும்,காத்தான்குடி அல்அமீன் மகளிர் வித்தியாலத்தில் 11பேரும்,காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 11பேரும்,காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் 10பேரும் காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயம் மற்றும் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயம்,அஷ்ஷ{ஹதா ஆகிய வித்தியாலயங்களில் தலா 08பேரும்,அன்வர் வித்தியாலயம் மற்றும் அந்நாஸர் வித்தியாலயம்,ஒல்லிக்குளம் அல்ஹம்றா வித்தியாலம்,பாலமுனை அஷ்ரப்  ஆகியனவற்றில் தலா மூவரும் காங்கேயனோடை அல் அக்ஷா,காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ்,காத்தான்குடி நூறாணியா,பிர்தௌஸ் ஆகிய வித்தியாலயயங்களில் தலா இருவரும் அடங்கலாக 174 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி 147க காணப்பட்டதுடன் இம்முறை அது 155ஆக உயர்த்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad