மகாத்மா காந்தியின் 144வது ஜயந்த தின நிகழ்வு மட்டு காந்தி சதுக்கத்தில்-(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 02, 2013

மகாத்மா காந்தியின் 144வது ஜயந்த தின நிகழ்வு மட்டு காந்தி சதுக்கத்தில்-(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான்;)

மகாத்மா காந்தியின் 144வது ஜயந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு காந்தி சேவா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காந்தியின் புதிய உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இடம்பெற்றது.


மட்டக்களப்பு காந்தி சேவா மன்றத்தின் தலைவர் கலாநிதி செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பில் காந்தி சிலையை ஸ்தாபித்தவரும் முன்னாள் த.தே.கூ மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராஜதுரை,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,சீ.யோகேஸ்வரன்,மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் உப தலைவரும் சென்ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான மீராசாஹிபு,ரமண மகரிஷி சுவாமி,மட்டக்களப்பு வின்சன்ட் மற்றும் ஆனப்பந்தி வித்தியாலய மாணவிகள்,ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு அதிதிகளினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் அவருக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பில் 1969 ஒக்டோபர் மாதம் 02ம் திகதி மகாத்மா காந்தியின் நினைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொல்லின் செல்வர் செல்லையா இராஜதுரையினால் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad